தனியுரிமை மீறலும், பொதுநலனுக்காக வாதாடுதலும்! – விஜய்-சங்கீதா மணமுறிவு மீதான சமஸ் கட்டுரையை முன்வைத்து… – ர. முகமது...
விஜயின் தனிப்பட்ட குணம், அவரது அரசியல் தகுதி, அவரது தனிப்பட்ட உறவுகள், ஒரு கணவராக அவரின் நடத்தை முதலான எதையும் பேசுவதற்கு முன்பு, இந்த விவகாரத்தில் நாம் எதைப் பேசுபொருளாக்கி இருக்க வேண்டும்? ஒரு பெண் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கையை நீதிமன்றத்தில் முறையிடுகிறார்; மூடிய அறை விசாரணை (In-camera proceedings) கேட்டிருக்கிறார்; ஊடகங்கள் தமது தனிப்பட்ட விவகாரத்தை விவாதிக்க தடை கோரியிருக்கிறார். அப்படியும் அவரது அந்த தனிப்பட்ட சட்ட ஆவணம் கசியவிடப்படுகிறது. ஊடகங்களும் அதனைப் பேசுபொருளாக்கியிருக்கின்றன. ஏதோவொரு செய்தியாக அல்லாமல், அது எத்தகைய செய்திகளாக/Contentகளாக மாறியது என்பது அனைவருக்கும் தெரிந்தது.
Young bodies, Old Heroes – ர. முகமது இல்யாஸ்
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் மீண்டும் இணையும் திரைப்படம் தமிழ் சினிமாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதன் டீசரில் இடம்பெற்றிருக்கும் இளம்பெண்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், 70 வயதைக் கடந்த நாயகர்களின் ஆண்மையையும், அவர்களின் மீதான ஈர்ப்பு குறையவில்லை என்பதை உணர்த்துவதற்காகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பது இல்லையே, ஏன்?
உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை?












