என்றும் ’நினைவில்’ வீரப்பன்!

ஒரு சமூகம் என்றும் தனது கடந்த கால நினைவுகளால் உயிர்த்துக் கொள்கிறது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளை தனிநபர்களின் உரையாடல்கள் வழியாக, கலைப் படைப்புகள் வழியாக, செய்தி ஆவணங்களின் வழியாக...

மொய்தீன் பாய்: ரஜினியின் இந்து-முஸ்லிம் அரசியல்!

ரஜினி முஸ்லிமாக நடிப்பதைப் பற்றியும், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ‘பாட்ஷா’ என அவர் நடித்ததையும் ஒப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் ரஜினியின் மதச்சார்பற்ற முகத்தைப் பாராட்டியும் பதிவுகளைக் காண முடிந்தது. ரஜினியின் திரைப்படங்கள் உண்மையிலேயே மதச்சார்பற்ற அவரது அரசியலை வெளிப்படுத்துபவை. அதில் மறுப்பதற்கு இல்லை; அவரது ஆன்மிக அரசியலில் இஸ்லாமியர்களுக்கும் இடம் இருப்பதை அவர் எப்போதும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு

காஷ்மீரைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளரான ஜாவித் அஹமது, பாராமுல்லா மாவட்டம் ரஃபியாபாத் நகரிலுள்ள வாட்டர்கம் பகுதியிலிருக்கும் தன் வீட்டிலிருந்து ஸ்ரீநகரிலுள்ள தனது அலுவலகதிற்குச் செல்லும் வழியில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்

தெஹல்காவில் இவர் பணியாற்றியதுதான் இவரது எழுத்துப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அந்நிறுவனம் 2002ல் நடந்த குஜராத் கலவரத்தின் பின்னணியைக் கண்டரியும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தது. சுமார் 10 மாதங்கள் கள ஆய்வு செய்து அது தொடர்பான செய்திகளைச் சேகரித்தார். உயிரைப் பணயம் வைத்து இவர் வெளிக்கொணர்ந்த திடுக்கிடும் உண்மைகளையெல்லாம் தெஹல்கா வெளியிட மறுக்கவே, அவற்றை "Gujarat Files: Anatomy of a cover up" என்கிற பெயரில் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார் ராணா. 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எவ்வாறு மூடி மறைத்தனர் என்பதை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்தியது.

ஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்

இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும், சாதியத்தை எதிர்த்தும் மிகத் துணிச்சலாக தன் எழுத்துகளின் மூலம் குரல் உயர்த்திய பெண் போராளி கௌரி லங்கேஷ். பல பத்திரிகையாளர்கள் அதிகார வர்க்கத்தின் நிழலில் அதற்குப் பணிவிடை செய்து வரும் சூழலில், அதிகாரத்திற்கு எதிராக சமரசமில்லாமல் சமர் செய்த ஆளுமை அவர்.