தமிழக அரசியல் களத்தில் மக்கள் திரட்சியின் பொருள் குறித்து சில சிந்தனைகள்…
1
கடந்த ஆகஸ்ட் 21 அன்று, மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. மாநாட்டின் படங்களில் மக்கள் கடலாக திரண்டிருந்ததும், முழக்கங்கள் இட்டதும்,...
ஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்
இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும், சாதியத்தை எதிர்த்தும் மிகத் துணிச்சலாக தன் எழுத்துகளின் மூலம் குரல் உயர்த்திய பெண் போராளி கௌரி லங்கேஷ். பல பத்திரிகையாளர்கள் அதிகார வர்க்கத்தின் நிழலில் அதற்குப் பணிவிடை செய்து வரும் சூழலில், அதிகாரத்திற்கு எதிராக சமரசமில்லாமல் சமர் செய்த ஆளுமை அவர்.
மொய்தீன் பாய்: ரஜினியின் இந்து-முஸ்லிம் அரசியல்!
ரஜினி முஸ்லிமாக நடிப்பதைப் பற்றியும், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ‘பாட்ஷா’ என அவர் நடித்ததையும் ஒப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் ரஜினியின் மதச்சார்பற்ற முகத்தைப் பாராட்டியும் பதிவுகளைக் காண முடிந்தது. ரஜினியின் திரைப்படங்கள் உண்மையிலேயே மதச்சார்பற்ற அவரது அரசியலை வெளிப்படுத்துபவை. அதில் மறுப்பதற்கு இல்லை; அவரது ஆன்மிக அரசியலில் இஸ்லாமியர்களுக்கும் இடம் இருப்பதை அவர் எப்போதும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.
என்றும் ’நினைவில்’ வீரப்பன்!
ஒரு சமூகம் என்றும் தனது கடந்த கால நினைவுகளால் உயிர்த்துக் கொள்கிறது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளை தனிநபர்களின் உரையாடல்கள் வழியாக, கலைப் படைப்புகள் வழியாக, செய்தி ஆவணங்களின் வழியாக...
கபிலனும் கிட்டானும் – Some thoughts.. – ர. முகமது இல்யாஸ்
இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் தலித் சினிமா மரபில் ஓர் பாய்ச்சல் என்று கூறுவது மிகையாகாது. தலித் தன்னிலையை,...
ஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்
தெஹல்காவில் இவர் பணியாற்றியதுதான் இவரது எழுத்துப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அந்நிறுவனம் 2002ல் நடந்த குஜராத் கலவரத்தின் பின்னணியைக் கண்டரியும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தது. சுமார் 10 மாதங்கள் கள ஆய்வு செய்து அது தொடர்பான செய்திகளைச் சேகரித்தார். உயிரைப் பணயம் வைத்து இவர் வெளிக்கொணர்ந்த திடுக்கிடும் உண்மைகளையெல்லாம் தெஹல்கா வெளியிட மறுக்கவே, அவற்றை "Gujarat Files: Anatomy of a cover up" என்கிற பெயரில் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார் ராணா. 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எவ்வாறு மூடி மறைத்தனர் என்பதை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்தியது.
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு
காஷ்மீரைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளரான ஜாவித் அஹமது, பாராமுல்லா மாவட்டம் ரஃபியாபாத் நகரிலுள்ள வாட்டர்கம் பகுதியிலிருக்கும் தன் வீட்டிலிருந்து ஸ்ரீநகரிலுள்ள தனது அலுவலகதிற்குச் செல்லும் வழியில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
உதய் Vs விஜய் – மீண்டும் பிம்பச்சிறை! – ர. முகமது இல்யாஸ்
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தி படுகொலை, உலகமயமாக்கல், மண்டல் கமிஷன், தொண்ணூறுகளில் நிகழ்ந்த இந்துப் பெரும்பான்மைவாதத் திரட்சி அரசியல், பாபர் மசூதி இடிப்பு, சாதிய வன்கொடுமைக் கலவரங்கள், தலித் இயக்கங்களின் எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, குஜராத் இஸ்லாமியர் இனப்படுகொலை, ஈழத்தமிழர் இனப்படுகொலை, காவிரி நதிநீர் விவகாரம், மோடியின் வளர்ச்சி, ஜெயலலிதா மரணம், கலைஞர் மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், மாநில உரிமைகள் இழப்பு, நீட் விவகாரம், சூழலியல் சார்ந்த பிரச்னைகள் எனப் பலவற்றைக் கடந்த பிறகு, தமிழக அரசியல் சூழல் மீண்டும் பிம்பங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறது.
















