சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு

காஷ்மீரைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளரான ஜாவித் அஹமது, கடந்த வியாழக்கிழமை பாராமுல்லா மாவட்டம் ரஃபியாபாத் பகுதியிலிருக்கும் தன் வீட்டிலிருந்து ஸ்ரீநகரிலுள்ள தனது அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரிடம் இதுபற்றி விசாரித்தபோது, ஜாவித் தனது அலுவகத்திற்குச் செல்லும் வழியில் இவ்வாறு நடந்துவிட்டது எனவும், அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

‘தி ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்தவர் ஜாவித் அஹமது. அதற்கு முன்பு ஹஃபிங்டன் போஸ்ட், ஃபஸ்ட் போஸ்ட் முதலான பல பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்துள்ளார். தி ட்ரிபூன் (The Tribune) பத்திரிகையிலும் பணியாற்றியுள்ளார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்ட மேற்படிப்பை 2016ல் நிறைவு செய்தார். அங்கு வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்வு செய்யப்பட்டு தங்கப் பதக்கம் பெற்ற இவரைப் பற்றி இதழியல் துறை பேராசிரியர் லியோ சாமுவேல் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், ஜாவித் மிகவும் மென்மையான குணம் உடையவர். அவருக்கு அதிகபட்சம் 30 வயதுதான் இருக்கும். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம்கூட நடந்தது. எனக்கு காஷ்மீரின் பல பக்கங்களை அறிமுகம் செய்தவர் ஜாவித். ‘வீ வில் மிஸ் யு ஜாவிட்..!’ என்று தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ரைசிங் காஷ்மீர் பத்திரிகை அதன் முதல் பக்கத்தில் ஜாவித் அஹமதுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஜாவித் ஒரு துடிப்பு மிக்க இளம் பத்திக்கையாளர். ஸ்ரீநகர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது இழப்பு வருத்தமளிக்கிறது’ என தி ரைசிங் காஷ்மீர் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. காஷ்மீரின் பல பத்திரிக்கையாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தங்கள் அனுதாபங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.