Home கார்ப்பரேட் ஆதிக்கம்

கார்ப்பரேட் ஆதிக்கம்

‘விட்னெஸ்’ – சமூகத்தில் நிகழும் அன்றாட அவலங்களுக்கு யார் ‘சாட்சி’?

மக்கள் பிரச்னைகளைப் பேசும் பெரும்பாலான திரைப்படங்கள் தேர்தல் அரசியல் கட்சிகளையும், கட்சிகளைச் சேர்ந்த தனிநபர் வில்லன்களையும் முன்னிறுத்துவதோடு சுருங்கி விடுகின்றன. ‘விட்னெஸ்’ அந்த சட்டகங்களுக்குள் அடங்காமல் சாதிய அமைப்பைப் பாதுகாப்பதில் அரசுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்துகிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவை நீக்க அரசுக் கட்டமைப்புக்கு இருக்கும் மெத்தனத்தை மிக ஆழமாக சாடுகிறது ‘விட்னெஸ்’.

‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!

முர்டோக் நிலவரங்களை தெளிவாக புரிந்து கொண்டவர். அவரது இந்திய பேரரசு இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் வினியோகத்திலிருந்து செய்தி, பதிப்பித்தல் மற்றும் திரைப்படம் வரை பரந்திருக்கிறது. ஸ்டார் இந்தியா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய (வருமான அடிப்படையில்) ஊடக பெருநிறுனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

முதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்!

நீரா ராடியாவின் உரையாடற் பதிவுகள் இந்திய அரசியல் அரங்கில் காலம் காலமாக நிலவி வந்த தரகுத்தனத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அம்பலப்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம் முதலாளித்துவ ஊடகங்களின் உண்மையான மறுபக்கத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியது.