’எறும்புகளை நசுக்க சுத்தியல்?!’ தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு நியமனமும் சர்ச்சையும்!
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்திகளின் உண்மை சரிபார்ப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநிலத் தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் சிறப்பு அமலாக்கத்துறையின் கீழ் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதோடு,...
தமிழ்நாடு, பாப்புலிசம் மற்றும் ’போஸ்ட் ட்ரூத்’! – யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களும் தமிழ்ச் சமூகமும்!
’மார்ஸ் தமிழ்’ என்ற புதிய யூட்யூப் சேனல் மூலமாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ஒன்றை நடத்தி, அதில் தமிழக பாஜகவுக்கும் யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கும் இடையிலான பேரங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றனர் மதன் ரவிச்சந்திரன் - வெண்பா கீதாயன் ஆகிய இருவர். இந்த இருவரின் கடந்த கால வரலாறும் அப்படியொன்றும் நேர்மையானது இல்லையென்ற போதிலும், அதனை வைத்து மட்டுமே இந்த மொத்த விவகாரத்தையும் அணுகிவிட முடியாது.
ஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன?
இளம் பெண் ஒருவர் கரும்புத் தோட்டத்தில் நிற்பது போன்ற அப்புகைப்படமானது பாதிக்கப்பட்ட பெண்ணின் படமில்லை எனத் தெரிய வந்துள்ளது. BOOM தளம் ஹத்ராஸ் பெண்ணின் சகோதரரிடம் அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்தபோது, அது தனது தங்கையின் புகைப்படமில்லை எனவும் அப்படத்தில் உள்ளவரை தனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
ஊரடங்கு: கோவில் பூசாரியை முஸ்லிம் எஸ்.பி தாக்கினாரா?
மத்திய பிரதேசத்தில் ஊரடங்கின்போது ஒரு கோவிலில் ராமநவமி அன்று தனியாக வழிபாடு செய்துவந்த பூசாரி உபேந்திர குமார் பாண்டே என்பவரை ரேவா எஸ்.பி ஆபித்கான் கொடூரமாகத் தாக்கினார் என்று.