ஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண்ணை ஆதிக்க சாதியைச் சார்ந்த நான்கு பேர் கடந்த செப்டம்பர் 14ம் தேதி மிகவும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். அந்தப் பெண் மிகக் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 29ல் அவர் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சூழலில், காவல்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் உடலை அவரின் குடும்பத்தின் அனுமதியின்றி எரித்தது சர்ச்சைக்குள்ளாகியது. ஆனால் அதை காவல்துறை அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை என்று உ.பி கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்னுக்கு நீதி வேண்டி டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, சமூக ஊடகங்களில் அந்த ஹத்ராஸ் தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு பல்வேறு Hashtag-களுடன் நாடு முழுக்க ஒரு புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இளம் பெண் ஒருவர் கரும்புத் தோட்டத்தில் நிற்பது போன்ற அப்புகைப்படமானது பாதிக்கப்பட்ட பெண்ணின் படமில்லை எனத் தெரிய வந்துள்ளது. BOOM தளம் ஹத்ராஸ் பெண்ணின் சகோதரரிடம் அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்தபோது, அது தனது தங்கையின் புகைப்படமில்லை எனவும் அப்படத்தில் உள்ளவரை தனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தைப் பெற்று சமூக ஊடகத்தில் பரவும் புகைப்படத்துடன் ஒப்புநோக்கியபோது, அது போலி என்பது உறுதிசெய்யப்பட்டது.

அப்படியானால் அந்தப் புகைப்படம் யாருடையது என BOOM ஆய்வு செய்தபோது சமூக ஊடகத்தில் முக்கியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதில், “ஹத்ராஸ் பிரச்னையில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் என் சகோதரியுடையது. 2018ம் ஆண்டு சன்டிகர் மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் அவர் இறந்துவிட்டார். அதற்காக நாங்கள் போலீஸில் புகார் அளித்தோம். அவர்கள் FIR போட மறுத்ததால் அதைக் கண்டித்து பரப்புரை செய்தபோது என் தங்கையின் அந்தப் புகைபடத்தைப் பயன்படுத்தினோம். அந்த வழக்கு சன்டிகரில் இப்போதும் நிலுவையிலுள்ளது. தயவுசெய்து யாரும் ஹத்ராஸ் விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி அப்புகைப்படத்தைப் பகிரவேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். நன்றி” என ஹிந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவு அஜய் ஜே யாதவ் என்பவரால் எழுதப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. அவரிடம் இதுகுறித்து விசாரிக்க BOOM தளம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.