Home நீதிமன்றத் தீர்ப்புகள்

நீதிமன்றத் தீர்ப்புகள்

சமூக வலைத்தளங்களை ஒடுக்க முனையும் இந்திய அரசு

தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத ஆபத்து ஆகியவற்றைக் காரணம் காட்டியே உலகெங்கிலும் மனித உரிமைகளும், கருத்துரிமைகளும் பறிக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களை வெறுப்பு அரசியலுக்கும் தீய நோக்கங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பது உண்மைதான். சில நேரங்களில் தனிநபர் தாக்குதல்களுக்கும் கூட இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றைக் காரணம் காட்டி அரசியல்சட்ட ஆளுகைக்கு முடிவுகட்டிவிட இயலாது. இத்தகைய தருணங்களில் தேவையான கண்காணிப்பை மேற்கொண்டு மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இவற்றைச் சாக்காக வைத்து முன்கூட்டியே தணிக்கையை நடைமுறைப்படுத்துவது என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மிக அடிப்படையான கருத்துரிமையைப் பறிப்பதே.