Home ஊடகச் சுதந்திரம்

ஊடகச் சுதந்திரம்

தமிழ்நாடு, பாப்புலிசம் மற்றும் ’போஸ்ட் ட்ரூத்’! – யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களும் தமிழ்ச் சமூகமும்!

’மார்ஸ் தமிழ்’ என்ற புதிய யூட்யூப் சேனல் மூலமாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ஒன்றை நடத்தி, அதில் தமிழக பாஜகவுக்கும் யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கும் இடையிலான பேரங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றனர் மதன் ரவிச்சந்திரன் - வெண்பா கீதாயன் ஆகிய இருவர். இந்த இருவரின் கடந்த கால வரலாறும் அப்படியொன்றும் நேர்மையானது இல்லையென்ற போதிலும், அதனை வைத்து மட்டுமே இந்த மொத்த விவகாரத்தையும் அணுகிவிட முடியாது.

`வரனே ஆவஷ்யமுண்டு’ – மலையாள சினிமாவின் பொறுப்பின்மையும் தமிழ் ட்ரோல்களின் எதிர்வினையும்!

மனித உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும், கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்காகவும் குரல்கொடுக்க முன்வராத தமிழ் ட்ரோல்களால் துல்கர் சல்மான் மீது எதிர்வினையாற்ற முடிந்தது. அவரை அடிபணிய வைக்க முடிந்தது. திரைப் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வோடு அமையப் பெற வேண்டும்; அதே வேளையில், இணைய ட்ரோல்களின் செலக்டிவ் எதிர்வினையையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

தவறைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டால் கைது செய்வதா? – கோவை காவல்துறைக்கு ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம்

சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உண்மையை அறிய அரசு தரப்பில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடை தெரியாத கேள்விகள் அழகானவை, உரையாடலுக்கு வழிவகுப்பவை

இந்தக் கட்டுரை ‘விஸ்வரூபம்’ பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ஒரு வாரத்திற்கு முன் தோழர் கவின்மலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதினேன். இப்போது 'இந்தியா டுடே'யில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் நான்...

விஸ்வரூபம், கருத்துச் சுதந்திரம், தனிமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள்

ஒரு நண்பர் ஒரு கதை அல்லது ஒரு கவிதை எழுதுகிறார். அது அவரது கருத்துச் சுதந்திரம். அது என்னைப் பாதிக்கிறது என நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எனது கருத்துச் சுதந்திரம். இதை நாம் ஏற்க வேண்டும். ஆனால் இன்று கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அரசின் தடையை எதிர்ப்பதாக இருப்பதைக் காட்டிலும் முஸ்லிம்களின் எதிர்ப்பை விமர்சிப்பதாகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்கள் இன்று தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலை மிகவும் கவலை அளிக்கிறது.

சமூக வலைத்தளங்களை ஒடுக்க முனையும் இந்திய அரசு

தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத ஆபத்து ஆகியவற்றைக் காரணம் காட்டியே உலகெங்கிலும் மனித உரிமைகளும், கருத்துரிமைகளும் பறிக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களை வெறுப்பு அரசியலுக்கும் தீய நோக்கங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பது உண்மைதான். சில நேரங்களில் தனிநபர் தாக்குதல்களுக்கும் கூட இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றைக் காரணம் காட்டி அரசியல்சட்ட ஆளுகைக்கு முடிவுகட்டிவிட இயலாது. இத்தகைய தருணங்களில் தேவையான கண்காணிப்பை மேற்கொண்டு மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இவற்றைச் சாக்காக வைத்து முன்கூட்டியே தணிக்கையை நடைமுறைப்படுத்துவது என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மிக அடிப்படையான கருத்துரிமையைப் பறிப்பதே.