LATEST ARTICLES

மீம்களில் வழியும் இஸ்லாமிய வெறுப்பு! – ர. முகமது இல்யாஸ்

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி உஸ்மான் என்ற நபரின் பேஸ்புக் பதிவு வைரலானது. வேறு மதத்தைச் சேர்ந்த தன் ஆண் நண்பரோடு உணவகம் சென்றிருந்த புர்கா அணிந்த இளம்பெண்ணிடம் கலாச்சாரக் காவலர் போல நடந்ததோடு, அதனை விரிவாக பெருமிதத்துடன் தன் பேஸ்புக் பக்கத்திலும் எழுதியிருந்தார் திருச்சி உஸ்மான். அதற்காக கடுமையான எதிர்வினையையும் எதிர்கொண்டார். எந்தவொரு தனி நபரையும் மிரட்டுவது, அவர்களின் நடத்தைக்குத் தீர்ப்பு எழுதுவது, அதன் மூலமாக தன் கலாச்சாரத் தூய்மையும், மதத் தூய்மையும் பாதுகாக்கப்பட்டுவிட்டதாகக் கருதுவது முதலான...

தியாகராஜன் குமாரராஜா — பொறுப்பற்ற துறப்பில் நிலைப்பாடுமில்லை, நேர்மையுமில்லை! ‘அவையம்’ கலந்துரையாடலை முன்வைத்து…

தமிழ்த்தேசியம் மற்றும் இடதுசாரிய அரசியல் பேசும் மே 17 இயக்கத்தின் 'அவையம் வாசிப்பு வட்டம்' பல்வேறு ஆளுமைகளை அழைத்துக் கலந்துரையாடல் நடத்துகிறது. சமீபத்தில் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா இதில் கலந்து கொண்டு உரையாடினார். குமாரராஜா போன்ற வெகுஜன இயக்குநர் இத்தகைய கூட்டங்களில் கலந்து, அதில் உரையாடல் வடிவில் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளித்தது ஆரோக்கியமானது. இந்த நிகழ்வின் முதல் பகுதி 'திசை புக்ஸ் ஸ்டோர்' தளத்தில் வெளியாகியுள்ளது. அரசியல் நிலைப்பாடுகளை மறுக்கும் குமாரராஜா அரசியல் இயக்க கூட்டத்தில் பங்கேற்றதே முதல் சுவாரஸ்யம். எனவே, இந்த காணொளியில் கவனப்படுத்த வேண்டிய விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

உண்மைக்குப் பிந்தைய உலகில் செய்திகளை உற்பத்தி செய்யும் ஊடகங்கள்! – ‘Photo Card’ செய்திகளுக்கு எதிராக – மு. அப்துல்லா

உண்மைக்குப் பிந்தைய யுகத்தில் (Post-Truth) பொய் மட்டும் பரவுவதில்லை. பல உண்மைகளும் பொய்மைப்படுத்தப்படுகின்றன என்பார்கள். ‘காங்கிரஸ் 300க்கு 40 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது’ என்று மம்தா சொன்னது உண்மை. ஆனால், ‘மாநிலக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் வேண்டும். பாஜக இந்துக்களைக் குழப்புவதுபோல் காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் ஆளும் பிராந்தியங்களில் முஸ்லிம்களைக் குழப்பினால் 300க்கு 40 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது’ என்ற அவர் பேசிய தகவலை அறியும்போது, உண்மை பொய்மையாகிறது. விளைவாக இந்தியா கூட்டணியிடையே மோதல், காங்கிரஸைச் சிறுமைப்படுத்திய மம்தா என்கிற ரீதியில் விவாதத்தை உருவாக்க முடிகிறது.

மரிச்ஜாப்பி: உண்மையும் வழுவும்! – ஹரிலால் நாத் புத்தகத்தின் மீதான விமர்சனம்! – மு.அப்துல்லா

1 ‘மரிச்ஜாப்பி இனப்படுகொலை’ என்பது மேற்கு வங்கத்தை ஆண்ட இடது முன்னணி அரசின் மீதான களங்கமாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த மக்கள் எல்லை மாநிலமான மேற்கு வங்கத்தைத் தவிர்த்து வளமற்ற தண்டகாரண்ய வனப்பகுதியில் தங்கவைக்கப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு 1977ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தவுடன் நம்பிக்கையுடன் அவர்கள் மரிச்ஜாப்பி சுந்தரவனப் பகுதிகளை நோக்கிப் புலம்பெயர்கிறார்கள். புதிய அகதிகளை அங்கு தங்கவைக்க முடியாத சூழல். ஜோதிபாசு தலைமையிலான...

என்றும் ’நினைவில்’ வீரப்பன்!

ஒரு சமூகம் என்றும் தனது கடந்த கால நினைவுகளால் உயிர்த்துக் கொள்கிறது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளை தனிநபர்களின் உரையாடல்கள் வழியாக, கலைப் படைப்புகள் வழியாக, செய்தி ஆவணங்களின் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது. ஒரு சமூகத்தின் கொண்டாட்டம், துயரம், காதல், வெற்றி, தோல்வி, அவமானம், அந்த சமூகம் விரும்பும் தலைவர், வெறுக்கும் தலைவர், மரணம், கொலை, கொள்ளை, நோய், மழை, பஞ்சம் முதலான அனைத்துமே ஆவணப்படுத்தப்பட்டு, நினைவுகளாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழங்கப்படுகின்றன. மனிதர்களின் படங்களையும்,...