என்றும் ’நினைவில்’ வீரப்பன்!

ஒரு சமூகம் என்றும் தனது கடந்த கால நினைவுகளால் உயிர்த்துக் கொள்கிறது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளை தனிநபர்களின் உரையாடல்கள் வழியாக, கலைப் படைப்புகள் வழியாக, செய்தி ஆவணங்களின் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது. ஒரு சமூகத்தின் கொண்டாட்டம், துயரம், காதல், வெற்றி, தோல்வி, அவமானம், அந்த சமூகம் விரும்பும் தலைவர், வெறுக்கும் தலைவர், மரணம், கொலை, கொள்ளை, நோய், மழை, பஞ்சம் முதலான அனைத்துமே ஆவணப்படுத்தப்பட்டு, நினைவுகளாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழங்கப்படுகின்றன. மனிதர்களின் படங்களையும்,...

’எறும்புகளை நசுக்க சுத்தியல்?!’ தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு நியமனமும் சர்ச்சையும்!

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்திகளின் உண்மை சரிபார்ப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநிலத் தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் சிறப்பு அமலாக்கத்துறையின் கீழ் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதன் தலைவராக ’யூ-டர்ன்’ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யூ-டர்ன் நிறுவனம் உண்மை சரிபார்ப்பு, போலிச் செய்திகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது என சமகாலத் தமிழ்ச் சூழலில் முக்கிய இடம் பெறும் ஊடகமாகக் கருத முடியும். உதாரணமாக, கொரோனா காலகட்டத்தின் தொடக்கத்தில், தப்லீக்...

‘எல்லாம் மாறும்’ என்ற அழகான பொய்! – ‘மாமன்னன்’ விமர்சனம்!

சாதியச் சமூகத்தின் பிரச்னையாகத் தொடங்கும் திரைப்படம் இறுதியை நோக்கி நகரும் போது மாமன்னனுக்கும் ரத்தினவேலுவுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னையாகவே சுருங்கிவிடுகிறது. ‘சர்கார்’ படத்தின் ‘ஒரு விரல் புரட்சி’ போல, தேர்தல் மூலமாக சுயமரியாதையை வெல்ல முடியும் என மாறும்போதே, ‘மாமன்னன்’ அதன் தொடக்கத்தில் முன்வைக்கும் கருத்தியலுக்கு முரணாக மாறிவிடுகிறது. ஒரு திரைப்படமாகவும், குறிப்பாக சமூக விடுதலையைப் பேச முயன்று, மீண்டும் பழைய சுழற்சிக்குள் வெறும் ‘மாமன்னன்’ என்ற கதாபாத்திரத்தின் விடுதலையாக மாறிவிடுகிறது.

‘மாடர்ன் லவ் சென்னை’ – மாடர்ன், சென்னை ஆகிய இரண்டுமே இல்லாத ரொமாண்டிக் கதைகள்!

தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகி, அமேசான் ப்ரைம் தளத்தில் உருவாக்கப்பட்ட ‘மாடர்ன் லவ்’ தொடரின் இரண்டு சீசன்களும் அழகியலோடு சமகால உறவுகளில், குறிப்பாக நியூ யார்க் நகரப் பின்னணியில், நிலவும் அன்புப் பரிமாற்றம் குறித்த கதைகளைப் பேசுபவை. இதில் ‘லவ்’ என்பது sexual, romantic, familial, platonic, self love என வித்தியாசப்படுத்தப்பட்டு பேசப்பட்டிருந்தது. ‘மாடர்ன் லவ் மும்பை’, ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ ஆகியவை ஏறத்தாழ இதே சட்டகங்களுக்கு உட்பட்டிருந்தாலும், தமிழில் ‘லவ்’ என்பது இன்னும் ஆண்-பெண் காதல்...

ஹலால் லவ் ஸ்டோரி: அறம், அழகியல், அரசியல்

‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதன் மாறுபட்ட கதையம்சத்தினாலும், பல்வேறு அடுக்குகளைக் கொண்ட கதைசொல்லல் பாணியாலும், பேசிய அரசியலாலும் பரவலான கவனத்தைப் பெற்றதோடு, பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று ஒரு விவாதத்தையும் உருவாக்கியிருந்தது. ஹலால் லவ் ஸ்டோரி கேரளத்தின் மலபார் பகுதியில் இரண்டாயிரங்களின் தொடக்க காலகட்டத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. இது கேரளத்தில் செயல்படும் ஓர் இஸ்லாமிய அமைப்பின் தொண்டர்களில் சிலர் ஒரு திரைப்படம் எடுக்க முயற்சிசெய்வது குறித்த திரைப்படமாகும். எனவே இது திரைப்படத்துக்குள் திரைப்படம் என்ற பாணியைக் கையாள்கிறது.