Home ஊடக அறம்

ஊடக அறம்

உண்மைக்குப் பிந்தைய உலகில் செய்திகளை உற்பத்தி செய்யும் ஊடகங்கள்! – ‘Photo Card’ செய்திகளுக்கு எதிராக – மு....

உண்மைக்குப் பிந்தைய யுகத்தில் (Post-Truth) பொய் மட்டும் பரவுவதில்லை. பல உண்மைகளும் பொய்மைப்படுத்தப்படுகின்றன என்பார்கள். ‘காங்கிரஸ் 300க்கு 40 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது’ என்று மம்தா சொன்னது உண்மை. ஆனால், ‘மாநிலக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் வேண்டும். பாஜக இந்துக்களைக் குழப்புவதுபோல் காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் ஆளும் பிராந்தியங்களில் முஸ்லிம்களைக் குழப்பினால் 300க்கு 40 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது’ என்ற அவர் பேசிய தகவலை அறியும்போது, உண்மை பொய்மையாகிறது. விளைவாக இந்தியா கூட்டணியிடையே மோதல், காங்கிரஸைச் சிறுமைப்படுத்திய மம்தா என்கிற ரீதியில் விவாதத்தை உருவாக்க முடிகிறது.

என்றும் ’நினைவில்’ வீரப்பன்!

ஒரு சமூகம் என்றும் தனது கடந்த கால நினைவுகளால் உயிர்த்துக் கொள்கிறது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளை தனிநபர்களின் உரையாடல்கள் வழியாக, கலைப் படைப்புகள் வழியாக, செய்தி ஆவணங்களின் வழியாக...

தமிழ்நாடு, பாப்புலிசம் மற்றும் ’போஸ்ட் ட்ரூத்’! – யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களும் தமிழ்ச் சமூகமும்!

’மார்ஸ் தமிழ்’ என்ற புதிய யூட்யூப் சேனல் மூலமாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ஒன்றை நடத்தி, அதில் தமிழக பாஜகவுக்கும் யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கும் இடையிலான பேரங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றனர் மதன் ரவிச்சந்திரன் - வெண்பா கீதாயன் ஆகிய இருவர். இந்த இருவரின் கடந்த கால வரலாறும் அப்படியொன்றும் நேர்மையானது இல்லையென்ற போதிலும், அதனை வைத்து மட்டுமே இந்த மொத்த விவகாரத்தையும் அணுகிவிட முடியாது.

பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும்

மெரினா போராட்டத்தை ஒட்டி நடந்த போலீசு வன்முறையில் சூறையாடப்பட்ட நடுக்குப்பத்தை எழுதும் போது இரு தரப்பில் அதாவது மீனவ மக்கள், போலீசு ஆகியோரிடம் கருத்துக்களைப் பெற்று எழுதுவதுதான் நடுநிலைமையா என்று கேட்கிறார் பாரதி தம்பி.

எங்கே மறைந்து போனீர்கள், வினோத்?

அருந்ததி ராய் தனக்கும் வினோத் மேத்தாவுக்கும் இடையே இருந்த அரசியல் உறவையும், அழகிய நட்பையும் குறித்து எழுதிய நினைவஞ்சலியின் தமிழாக்கம் இது. அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு இந்துத்துவம் மேலும் மேலும் தனது இருப்பை உறுதி செய்து வருகின்ற நேரத்தில் அதன் பேராபத்தை மக்களுக்கு இடைவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஊடகவியலாளரின் மரணம் குறித்த அருந்ததி ராயின் இந்த அஞ்சலிக் குறிப்பை படிக்கும் போது நமது இதயம் மேலும் கனக்கிறது.

அப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை

பெரும்பாலான செய்தி இதழ்கள் எல்லாம், ‘தண்டனை நிறைவேற்றப்பட்டது’ ‘இதோடு நிறுத்திக்கொள்ளலாம்’ ‘இதை விமர்சனமாக்காதீர்கள்’ ‘இதை அரசியலாக்காதீர்கள்’ என்று சிந்தனையை முடக்கிய வேளையில் ‘இந்து’ நாளிதழ், இது பற்றிய பலதரப்புக் கேள்விகளை முன்னிறுத்தி வெகுமக்களிடம் ஒரு அரசியல் விவாதத்தைத் தூண்டியிருப்பதை அறியமுடிகிறது.

கவுஹாத்தி சம்பவமும் ஊடக அறமும்

இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு ஊடகவியலாளர், அறம்சார்ந்த மனிதர் என்கிறவகையில் தனது கேமராவை தூக்கி எறிந்துவிட்டு அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பதா? அல்லது ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியை மறந்துவிட்டு நிகழ்வைப்பதிவு செய்து உலகிற்கு அறிவிப்பதற்கு முன்னுரிமை தருவதா?