LATEST ARTICLES

’ஜன நாயகன்’ Vs சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ – தமிழ்நாட்டின் ‘Barbenheimer’ சூழல்! – ர. முகமது இல்யாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ மற்றும் மற்றொரு பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பீ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி, சர்வதேச அளவில் பெரும் கலாச்சார உரையாடல்களை உற்பத்தி செய்தன. இரு திரைப்படங்களின் தலைப்பையும் கலந்து 'Barbenheimer' என்ற சொல் உருவாக்கப்பட்டு இணையத்தில் ஒரு கலாச்சார நிகழ்வாக கருதப்பட்டது. அடிப்படையில் இரு நேரெதிர் அரசியல், கலாச்சாரப் பிரதிகள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொள்வதும்,...

‘பைசன் காளமாடன்’: வன்முறை, இணக்கம், ‘நல்ல தேசியம்’ குறித்த விமர்சனங்கள் – மு. அப்துல்லா

மாரி செல்வராஜ் முதல் படமான ’பரியேறும் பெருமாள்’, மணிரத்னம் தனது சரக்கு மொத்தமும் தீர்ந்து, பல்வேறு நடிகர்களை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்ற மார்க்கெட்டை தொடங்கிய ’செக்க சிவந்த வானம்’ ஆகிய இரண்டும் ஒரே நாள் இடைவெளியில் வெளியாகின. தமிழ் சினிமா திரைமொழியில் மணிரத்னத்திற்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக, அரசியல் படங்களைத் திறம்பட அவர் கையாண்ட முறை இன்று பேசும் குறியீட்டு அழகியலுக்கெல்லாம் முன்னோடி. ’ரோஜா’, ’இருவர்’, ’உயிரே’ போன்ற படங்களில் மணிரத்னத்தின் அரசியல் நிலைப்பாடுகள் நாம் அறிந்தவை. அதே நேரத்தில்,...

சங்கரபுரமும், வணத்தியும்: ’இட்லி கடை’ மற்றும் ’பைசன்’ திரைப்படங்கள் கட்டமைக்கும் ’கிராமம்’ எனும் வெளி! – அருண் பிரகாஷ் ராஜ்

தலித்திய நோக்கில் இருந்து காந்தியின் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, அவர் காலனியம் அறிமுகம் செய்த நவீனத்திற்கு மாற்றாக இந்திய கிராமங்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளையே தான் உருவாக்க விரும்பும் ராம ராஜ்ஜியத்திற்கு முன் மாதிரியாகக் கொண்டிருந்தார் என்பது. கிராமங்களைப் பற்றிய இத்தகைய கண்ணோட்டத்தை இந்தியாவைச் சுற்றி பல முறை மேற்கொண்ட பயணங்களில் இருந்து மட்டும் காந்தியார் உருவாக்கிக் கொள்ளவில்லை. மாறாக, கிராமங்களை இந்தியாவின் ‘ஆன்மா’வாகவும், அவை பல நூற்றாண்டுகளாக எந்த மாற்றங்களையும் சந்திக்காத, கலப்படமற்ற வெளியாகவும்...

கபிலனும் கிட்டானும் – Some thoughts.. – ர. முகமது இல்யாஸ்

இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் தலித் சினிமா மரபில் ஓர் பாய்ச்சல் என்று கூறுவது மிகையாகாது. தலித் தன்னிலையை, குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த சமகால தலைமுறையைச் சார்ந்த தலித் ஆணின் தன்னிலையை மாரி செல்வராஜ் தொடர்ந்து தனது பிரதிகளின் வழியாக பதிவுசெய்து வந்திருக்கிறார். சாதிய ஒடுக்குமுறையின் காரணமாக அதனால் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிமனிதர்கள் நம் சமூகத்தில் என்ன வகையான அனுபவங்களைப் பெற்றார்கள், அது அவர்களுக்கு அளித்த புரிதல்...

தமிழக அரசியல் களத்தில் மக்கள் திரட்சியின் பொருள் குறித்து சில சிந்தனைகள்…

1 கடந்த ஆகஸ்ட் 21 அன்று, மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. மாநாட்டின் படங்களில் மக்கள் கடலாக திரண்டிருந்ததும், முழக்கங்கள் இட்டதும், தவெக தலைவர் நடிகர் விஜய் ரேம்ப் வாக் செய்யும் போது அவரைத் தொட முயன்று ஏறியது, தூக்கியெறியப்பட்டது முதலான அனைத்து காட்சிகளும் பல்வேறு மக்கள் தரப்பினரையும் சென்று சேர்ந்திருக்கிறது; பேசுபொருளாகியிருக்கிறது. தவெக சார்பில் நடத்தப்பட்ட இரண்டாவது மாநில மாநாடு வழக்கமான அரசியல் கட்சி மாநாடுகளின் விதிமுறைகளுக்கு உட்படாமல் ஒரு...