அகதிகளை மனிதாய நீக்கம் செய்யும் இரு சொல்லாடல்கள்
செய்திகள் வெளியிடும்போது மையநீரோட்ட ஊடகங்கள் (குறிப்பாக வடமாநில ஊடகங்கள்) பலசமயங்களில் இந்து தேசியவாதிகள் உருவாக்கித் தரும் சொல்லாடல்களை அப்படியே கையாள்கின்றன. இதன் விளைவாக முக்கியமான விவகாரங்கள் பலவற்றை மக்கள் இந்துத்துவ கதையாடல்களின் வாயிலாக புரிந்துகொள்வதற்கு வழியமைத்துத் தரப்படுகின்றது.
விஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை
தமிழில் தேவர் சாதிப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்துதான் வந்திருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம். அதனாலேயே மேற்கண்ட விவாதத்தின் பின்னணியில் வைத்து இந்தப் படத்தைப் புரிந்துகொள்வது நமக்கு நலன் பயக்கும்.
விஸ்வரூபம் இரண்டாம்...
புதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்
தெரிந்தே பொய் சொல்வது, பொய் அம்பலப்படும்போது கூச்சமே இல்லாமல் கூச்சலிடுவது, சரக்கே இல்லாமல் சர்வரோக நிவாரணியாக அனைத்துப் பிரச்னைகளிலும் அடித்துவிடுவது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘நீ மட்டும் யோக்கியமா?’ என திசைதிருப்பல் கேள்விகளில் தந்திரமாக ஒளிந்துகொள்வது… - இவைதான் பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்களின் தகுதிகள்.
“தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன?
அக்கட்டுரை முழுவதும் சொல்லப்படுவது இதுதான். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனல்மின் நிலையம், நிலக்கரிச் சுரங்கங்கள், அணு உலை மி்ன்திட்டம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து முடக்கி, இந்திய வளர்ச்சியைத் தடுக்கச் சதி்செய்கின்றன சில அந்நிய சக்திகள். NGO-க்களின் மூலம் அதை அவை நிறைவேற்றுகின்றன. NGO-க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது இதன் விளைவுதான் என இக்கட்டுரை ஆரம்பம் முதல் இறுதிவரை சொல்லிச் செல்கிறது.
‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பது இல்லையே, ஏன்?
உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை?















