அமெரிக்கத் திரைப்படத்திற்கு எதிரான உலக முஸ்லிம்களின் போராட்டம்

அமெரிக்கா தான் விதைத்த வினைகளை இப்போது அறுவடை செய்யத் துவங்கியிருக்கிறது.

கூடங்குளமும் ஊடக இருட்டடிப்புகளும்

எல்லா நாளிதழ்களில் சொல்லப்பட்ட செய்திகளையும் போராட்டக்குழுவினர் தரப்பில் சொல்லப்பட்ட செய்திகளையும் காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்ட செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெரும்பான்மை ஊடகங்கள் காவல்துறையின் சார்பாக மட்டுமே நின்று அவர்களின் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலேயே செயல்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

கவுஹாத்தி சம்பவமும் ஊடக அறமும்

இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு ஊடகவியலாளர், அறம்சார்ந்த மனிதர் என்கிறவகையில் தனது கேமராவை தூக்கி எறிந்துவிட்டு அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பதா? அல்லது ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியை மறந்துவிட்டு நிகழ்வைப்பதிவு செய்து உலகிற்கு அறிவிப்பதற்கு முன்னுரிமை தருவதா?

சமூக வலைத்தளங்களை ஒடுக்க முனையும் இந்திய அரசு

தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத ஆபத்து ஆகியவற்றைக் காரணம் காட்டியே உலகெங்கிலும் மனித உரிமைகளும், கருத்துரிமைகளும் பறிக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களை வெறுப்பு அரசியலுக்கும் தீய நோக்கங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பது உண்மைதான். சில நேரங்களில் தனிநபர் தாக்குதல்களுக்கும் கூட இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றைக் காரணம் காட்டி அரசியல்சட்ட ஆளுகைக்கு முடிவுகட்டிவிட இயலாது. இத்தகைய தருணங்களில் தேவையான கண்காணிப்பை மேற்கொண்டு மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இவற்றைச் சாக்காக வைத்து முன்கூட்டியே தணிக்கையை நடைமுறைப்படுத்துவது என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மிக அடிப்படையான கருத்துரிமையைப் பறிப்பதே.

‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!

முர்டோக் நிலவரங்களை தெளிவாக புரிந்து கொண்டவர். அவரது இந்திய பேரரசு இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் வினியோகத்திலிருந்து செய்தி, பதிப்பித்தல் மற்றும் திரைப்படம் வரை பரந்திருக்கிறது. ஸ்டார் இந்தியா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய (வருமான அடிப்படையில்) ஊடக பெருநிறுனங்களில் ஒன்றாக விளங்குகிறது.