பூலோகவியாஸன் | ஆழி. செந்தில்நாதன் உரை

தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம் - காலச்சுவடு. ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா. பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு. பதிப்பாசிரியர் : ஜெ. பாலசுப்பிரமணியம். வெளியிட்டு உரை : ஆழி. செந்தில்நாதன். பெறுவோர் : கு. உமாதேவி, எ. பாலாஜி.

பூலோகவியாசன் என்றொரு பௌத்த இதழ்

பூலோகவியாசன் இதழ் 1903ம் வருடம் அக்டோபர் மாதம் சென்னையில் தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரன்பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்டு 1917 வரை வெளிவந்தது. இந்த இதழ் எண்.16, ஆனைக்கார கோனான் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை என்னும் முகவரியில் ஜி.வேதமாணிக்கம் பிள்ளை என்பவருக்குச் சொந்தமான பூலோகவியாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும்

மெரினா போராட்டத்தை ஒட்டி நடந்த போலீசு வன்முறையில் சூறையாடப்பட்ட நடுக்குப்பத்தை எழுதும் போது இரு தரப்பில் அதாவது மீனவ மக்கள், போலீசு ஆகியோரிடம் கருத்துக்களைப் பெற்று எழுதுவதுதான் நடுநிலைமையா என்று கேட்கிறார் பாரதி தம்பி.

மோடியின் ராஜகுரு சோ ராமசாமி

சென்னை மயிலாப்பூர், தமிழக ராஜகுருக்களின் தலைநகரம். பாரதியோ இல்லை ஆழ்வார்பேட்டை ஆண்டவனோ, போயஸ் தோட்டத்து பெருந்தலைகளோ, ஊடக குழுமங்களின் அதிபர்களோ அனைவரும் சங்கமித்திருக்கும் புண்ணிய பூமி.

இந்திய ஊடகங்களில் சாதியம்

15 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டமேற்படிப்பில் இதழியல் மாணவியாக எனது பல்கலைக்கழக பத்திரிகையில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களின் கூலி உயர்வு போராட்டம், அதை தொடர்ந்த அரச பயங்கரவாதம் குறித்து எழுதினேன். 17 தலித்கள் கொல்லப்பட்ட கொடுமை அது. எனது கட்டுரையால் சஸ்பெண்ட் செய்யப்படும் நெருக்கடிக்கு ஆளானேன். எனது அந்த முதல் கட்டுரை தந்த அனுபவத்தால் சாதியை புரிந்து கொள்ளவும் தலித் மக்களின் துயரங்களை ஓர் ஊடகவியலாளராக வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் பேராவல் கொண்டேன்.