தலித் இதழியலின் வரலாறு
தலித் இதழியில் வரலாற்றில் மட்டுமல்ல தமிழ் இதழியல் வரலாற்றிலும் முக்கியமான வரவு, சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை. மேலதிக ஆய்வுக்கான பல புதிய வாசல்களை இந்நூல் திறந்துவைக்கிறது. இரண்டாவது நூல், பூலோகவியாஸன் இதழில் வெளிவந்த சில சுவையான, முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு.
பூலோகவியாசன் என்றொரு பௌத்த இதழ்
பூலோகவியாசன் இதழ் 1903ம் வருடம் அக்டோபர் மாதம் சென்னையில் தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரன்பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்டு 1917 வரை வெளிவந்தது. இந்த இதழ் எண்.16, ஆனைக்கார கோனான் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை என்னும் முகவரியில் ஜி.வேதமாணிக்கம் பிள்ளை என்பவருக்குச் சொந்தமான பூலோகவியாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்
பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.
இஸ்லாமியத் தமிழ் இதழியல் வரலாறு
இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் சில கண்டறியப் பெற்று இக்கட்டுரையில் சுட்டப் பெற்றுள்ளன. இலக்கிய ஆய்வுகளில் ஆர்வம் மிகக் கொண்டுள்ள ஆய்வாளர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பரப்பினை உடைய இஸ்லாமியத் தமிழ் இதழியலில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினால் சமயம், சமுதாயம் மட்டுமல்லாது இலக்கியம் தொடர்பான அரிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய இயலும் என்பதில் ஐயமில்லை.
பூலோகவியாஸன் | ஆழி. செந்தில்நாதன் உரை
தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம் - காலச்சுவடு. ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா. பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு. பதிப்பாசிரியர் : ஜெ. பாலசுப்பிரமணியம். வெளியிட்டு உரை : ஆழி. செந்தில்நாதன். பெறுவோர் : கு. உமாதேவி, எ. பாலாஜி.















