2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!

இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது. ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை.

காவி மோடியின் பணியில் கார்ப்பரேட் மீடியா

தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்கள் என்றைக்குமே தங்களது முதலாளிகளின் விருப்பத்தின்பேரில்தான் செயல்படுகின்றன. அவை ஒரு நாளும் நடுநிலைமையோடு செயல்பட்டதில்லை. இதுநாள்வரை நாம் கூறியபோதெல்லாம் ஏற்காதவர்களுக்கு இந்த உண்மையை ஆம் ஆத்மி கட்சியினர் தமது பிரச்சாரத்தின் மூலம் விளக்கி வருகின்றனர்.

தெகல்காவின் மறுபக்கம்!

தெகல்காவின் வீழ்ச்சியில் ஆதாயம் அடையத் துடிப்பது யார் என்பது வெளிப்படையானது. அது ஆதாயமா, இல்லையா என்பது பிறகு. முதலில் இது பழிவாங்குதல். ‘இந்து’ மனம் முதல், ‘தி இந்து’ இதழ் வரை தேஜ்பால் மீது பாய்ந்து குதறுவது இதனால்தான்.

சொல்வதெல்லாம் பொய்! செய்வதெல்லாம் ஃபிராடு!!

பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை.

‘பரதேசி’ : பாலா மற்றும் நாஞ்சில் நாடனின் மனிதத் தன்மை பற்றி ஒரு குறிப்பு

என்ன தேவைக்காக நாவலில் வருகிற மனிதாபிமானம் மிக்க ஒரு அற்புதமான மருத்துவக் கதாபாத்திரத்தை, ஒரு மதம் மாற்றும் கிறிஸ்தவக் கோமாளியாக மாற்றினீர்கள்? எல்லோராலும் கைவிடப்பட்ட அடிமைத் தோட்டத் தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு பலசரக்குக் கடைக்காரனை (நாவலில் காளிச் செட்டி) ஒரு முஸ்லிமாகவும் மாற்றிச் சித்திரித்திருப்பது எதற்காக? இவற்றின் மூலம் கலாபூர்வமாகவோ அல்லது அறவியல் அடிப்படையிலோ என்ன சாதித்துள்ளீர்கள்?