Home சினிமா

சினிமா

என்றும் ’நினைவில்’ வீரப்பன்!

ஒரு சமூகம் என்றும் தனது கடந்த கால நினைவுகளால் உயிர்த்துக் கொள்கிறது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளை தனிநபர்களின் உரையாடல்கள் வழியாக, கலைப் படைப்புகள் வழியாக, செய்தி ஆவணங்களின் வழியாக...

‘எல்லாம் மாறும்’ என்ற அழகான பொய்! – ‘மாமன்னன்’ விமர்சனம்!

சாதியச் சமூகத்தின் பிரச்னையாகத் தொடங்கும் திரைப்படம் இறுதியை நோக்கி நகரும் போது மாமன்னனுக்கும் ரத்தினவேலுவுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னையாகவே சுருங்கிவிடுகிறது. ‘சர்கார்’ படத்தின் ‘ஒரு விரல் புரட்சி’ போல, தேர்தல் மூலமாக சுயமரியாதையை வெல்ல முடியும் என மாறும்போதே, ‘மாமன்னன்’ அதன் தொடக்கத்தில் முன்வைக்கும் கருத்தியலுக்கு முரணாக மாறிவிடுகிறது. ஒரு திரைப்படமாகவும், குறிப்பாக சமூக விடுதலையைப் பேச முயன்று, மீண்டும் பழைய சுழற்சிக்குள் வெறும் ‘மாமன்னன்’ என்ற கதாபாத்திரத்தின் விடுதலையாக மாறிவிடுகிறது.

தியாகராஜன் குமாரராஜா: உள்ளடக்கமற்ற கலை, கலைக்கு மேலான சரக்கு!

ஒரு திரைப்பட இயக்குநராக எத்தகைய சினிமா மரபையும் பேசக் குமாரராஜா விரும்பவில்லை. தனது படங்கள் (அவை இரண்டு மட்டும் என்றபோதும்) பற்றிக்கூடத் தான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார். உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவல் என்றால், அதை நீங்களே தேடிக்கொள்ளுங்கள், முடியாத பட்சத்தில் அதைக் கைவிட்டுவிடுங்கள் என்று போகிற போக்கில் (just like that) முடித்துவிடுகிறார். சினிமாவை இதற்கு மேல் அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

`தல்லுமாலா’ – இது வெறும் சண்டைப் படம் அல்ல!

’தல்லுமாலா’ படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்கள் முஸ்லிம்கள் என்ற போதும், ’மாமனிதன்’, ’நீர்ப்பறவை’ முதலான படத்தில் வரும் அப்பழுக்கற்ற பாத்திரங்கள் போலவோ, ’விஸ்வரூபம்’ தொடங்கி ’பீஸ்ட்’ வரையிலான தீவிரவாதிகளாகவோ இல்லாமல், சமகால இளைஞர்களைப் பிரதிபலிக்கின்றனர். சிகரெட் புகைப்பதும், மது அருந்துவது போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான செயல்களைச் செய்யும் இந்தக் கதாபாத்திரங்களை அதே திரைக்கதையில் இஸ்லாமிய அடிப்படையில் அறிவுறுத்தும் காட்சிகளும் இதில் உண்டு. மாட்டுக்கறியைப் போற்றுவது, இறைச்சிக்காக விற்கப்படும் எருமை மாட்டுக்குத் தேன் மிட்டாய் வழங்கி வருத்தம் கொள்வது என வழக்கமான இஸ்லாமியர் சித்தரிப்புகளை உடைத்து நொறுக்கியிருக்கிறது ’தல்லுமாலா’. தாயைத் தாக்கிய மகனை அடிக்கும் கதாநாயகனை ’இஸ்லாமிய அடிப்படைவாதி’ என்று விமர்சகர்கள் அழைத்தால் அதனை நிச்சயமாக வரவேற்கலாம்.

Forrest Gump Vs Laal Singh Chaddha… ஆதிக்கத்தின் அப்பாவித்தனமும், ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனமும் வேறானவை!

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ அமெரிக்காவின் கலாச்சார, வரலாற்றைப் பதிவு செய்த டாப் 100 திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அதன் ரீமேக்கான ‘லால் சிங் சத்தா’ எப்படியிருக்கப் போகிறது என்ற ஆர்வம் எழுவது இயல்பு. ‘லால் சிங் சத்தா’ சீக்கியக் கதாபாத்திரத்தை முன்னிறுத்துவதாக அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டப்பட்டபோது, அந்த ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்காவின் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரின் கதை, இந்தியாவில் ரீமேக் செய்யப்படும்போது ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரின் கதையாக மாற்றப்பட்டிருக்கிறது.

`முல்க், ஆர்டிகிள் 15, தப்பட்!’ – பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் துணிச்சலும், போதாமையும்!

இந்திய சமூகத்தில் ஓர் இந்துவாக, உயர்சாதியைச் சேர்ந்தவராக, ஆணாக அனுபவ் சின்ஹா இயக்கிய திரைப்படங்கள் பாராட்டுக்குரியவை என்ற போதும், அவரது படைப்புகள் அவரது அடையாளங்களின் வழியான பார்வையில் வெளியாகி, அவரது அரசியலின் போதாமையையே வெளிபடுத்தியிருக்கின்றன.

தேவர் மகள் – முத்தையாவின் நாயகிகள் பற்றிய சில குறிப்புகள்! – ர. முகமது இல்யாஸ்

சமகால தமிழ் சினிமாவில் தேவர் சமூகத்தின் கதையாடல்களை வன்முறையோடும், பெருமிதத்தோடும் முன்வைக்கும் படைப்பாளிகளுள் முக்கியமானவர் முத்தையா. ’குட்டிப் புலி’ தொடங்கி, ‘கொம்பன்’, ‘மருது’, ‘தேவராட்டம்’, ’விருமன்’ முதலான அவரது அனைத்து...

`நசீர்’ என்றொரு நல்ல முஸ்லிம்!

மதக்கலவரங்களாலும், குண்டுவெடிப்பாலும் பிளவுண்ட கோவை நகரத்தின் முஸ்லிம் ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையைப் பேசுகிறது ’நசிர். கோவையைச் சேர்ந்த இயக்குநர் அருண் கார்த்திக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

’ஜன நாயகன்’ Vs சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ – தமிழ்நாட்டின் ‘Barbenheimer’ சூழல்! – ர. முகமது இல்யாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ மற்றும் மற்றொரு பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பீ’ ஆகிய இரண்டு...

நசீர்: மற்றமையை மனிதாயப்படுத்துவதன் அழகியல்

எதிர்மறை அம்சம் தவிர்த்து ‘நசீர்’ முஸ்லிம் வாழ்க்கையின் மானுடத்தன்மையையும் அன்றாடத்தையும் படம் பிடித்திருப்பது, இஸ்லாமோ ஃபோபியாவை ஒரு கட்டமைப்பு ரீதியான யதார்த்தமாகக் காட்டியிருப்பது, இந்து முஸ்லிம் கலவரம் என்றெல்லாம் மையவாதம் பேசாமல் முஸ்லிம் விரோத இந்து வன்முறையைப் படம்பிடித்திருப்பது, இந்து வன்முறையை சில மத வெறியர்களின் செயல் என்று சுருக்காமல் சமூகத்தின் பல மட்டங்களிலும் நிலவும் தேசியவாத-முஸ்லிம் மற்றமையாக்கக் கதையாடல்கள் மற்றும் நிகழ்த்துதல்களின் விளைபொருளாகக் காட்டியிருப்பது போன்றவை எல்லாம் மிக முக்கியமான பங்களிப்புகள். அதற்காகவே நாம் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும்.