சீதா ராமம்: காதல் காவியம் அல்ல, காவி விஷம்!
அமீர் கான் நடிப்பில் வெளிவந்துள்ள லால் சிங் சத்தா திரைப்படத்தைப் பார்ப்பதற்காக ஒரு பத்திரிகையாள நண்பருடன் திரையரங்கு சென்றேன். டிக்கெட்டை வாங்கப்போகும்போதுதான் தெரிந்தது அந்தப் படம் இந்தியில் திரையிடப்படுகிறது என்பது....
Forrest Gump Vs Laal Singh Chaddha… ஆதிக்கத்தின் அப்பாவித்தனமும், ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனமும் வேறானவை!
‘ஃபாரெஸ்ட் கம்ப்’ அமெரிக்காவின் கலாச்சார, வரலாற்றைப் பதிவு செய்த டாப் 100 திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அதன் ரீமேக்கான ‘லால் சிங் சத்தா’ எப்படியிருக்கப் போகிறது என்ற ஆர்வம் எழுவது இயல்பு. ‘லால் சிங் சத்தா’ சீக்கியக் கதாபாத்திரத்தை முன்னிறுத்துவதாக அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டப்பட்டபோது, அந்த ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்காவின் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரின் கதை, இந்தியாவில் ரீமேக் செய்யப்படும்போது ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரின் கதையாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனின் அபத்தங்களும் ஆபத்துகளும்
அடிப்படை உரிமைகளற்று, அன்றாடம் பெரும் நெருக்கடிகளுக்கிடையில் வாழ்க்கையை நகர்த்தியபடி, இத்தேசத்தின் குடிகள் ஆவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஈழ அகதிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருக்கும் சீரியல்தான் ஃபேமிலி மேன் 2. மட்டுமின்றி, முதல் சீசன் முழுவதும் பரவிக்கிடந்த இஸ்லாமிய வெறுப்பு இரண்டாவதிலும் சிதறிக்கிடக்கிறது.
நசீர்: மற்றமையை மனிதாயப்படுத்துவதன் அழகியல்
எதிர்மறை அம்சம் தவிர்த்து ‘நசீர்’ முஸ்லிம் வாழ்க்கையின் மானுடத்தன்மையையும் அன்றாடத்தையும் படம் பிடித்திருப்பது, இஸ்லாமோ ஃபோபியாவை ஒரு கட்டமைப்பு ரீதியான யதார்த்தமாகக் காட்டியிருப்பது, இந்து முஸ்லிம் கலவரம் என்றெல்லாம் மையவாதம் பேசாமல் முஸ்லிம் விரோத இந்து வன்முறையைப் படம்பிடித்திருப்பது, இந்து வன்முறையை சில மத வெறியர்களின் செயல் என்று சுருக்காமல் சமூகத்தின் பல மட்டங்களிலும் நிலவும் தேசியவாத-முஸ்லிம் மற்றமையாக்கக் கதையாடல்கள் மற்றும் நிகழ்த்துதல்களின் விளைபொருளாகக் காட்டியிருப்பது போன்றவை எல்லாம் மிக முக்கியமான பங்களிப்புகள். அதற்காகவே நாம் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும்.
`நசீர்’ என்றொரு நல்ல முஸ்லிம்!
மதக்கலவரங்களாலும், குண்டுவெடிப்பாலும் பிளவுண்ட கோவை நகரத்தின் முஸ்லிம் ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையைப் பேசுகிறது ’நசிர். கோவையைச் சேர்ந்த இயக்குநர் அருண் கார்த்திக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
‘யார் குற்றவாளி?’ – ‘பாதாள் லோக்’ முன்வைக்கும் பகிரங்கமான கேள்வியும் ரகசியமான பதிலும்!
இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் சமூகங்கள், அதிகார வர்க்கத்தில் under represented ஆக இருப்பதும், இதே சமூகங்கள் இந்திய சிறைச்சாலைகளில் over represented ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல. இந்த உண்மையைக் கதைக்கருவாக்கி, அதன் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’.
`முல்க், ஆர்டிகிள் 15, தப்பட்!’ – பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் துணிச்சலும், போதாமையும்!
இந்திய சமூகத்தில் ஓர் இந்துவாக, உயர்சாதியைச் சேர்ந்தவராக, ஆணாக அனுபவ் சின்ஹா இயக்கிய திரைப்படங்கள் பாராட்டுக்குரியவை என்ற போதும், அவரது படைப்புகள் அவரது அடையாளங்களின் வழியான பார்வையில் வெளியாகி, அவரது அரசியலின் போதாமையையே வெளிபடுத்தியிருக்கின்றன.

















