கொரோனா: வீழ்ச்சியின் புதிய உச்சத்தை எட்டும் ஊடகத்துறை!
மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
‘கூலி!’ – ஒரு புரட்சிகர சொல்லை அரசியல் நீக்கம் செய்தல் – ர. முகமது இல்யாஸ்
ஒரு காலம் இருந்தது. ‘கூலி’ என்ற சொல் தொழிலாளர் ஒற்றுமை, வியர்வை, வர்க்கப் போராட்டம் முதலானவற்றைத் தாங்கியிருந்த காலம் அது. உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக...
நசீர்: மற்றமையை மனிதாயப்படுத்துவதன் அழகியல்
எதிர்மறை அம்சம் தவிர்த்து ‘நசீர்’ முஸ்லிம் வாழ்க்கையின் மானுடத்தன்மையையும் அன்றாடத்தையும் படம் பிடித்திருப்பது, இஸ்லாமோ ஃபோபியாவை ஒரு கட்டமைப்பு ரீதியான யதார்த்தமாகக் காட்டியிருப்பது, இந்து முஸ்லிம் கலவரம் என்றெல்லாம் மையவாதம் பேசாமல் முஸ்லிம் விரோத இந்து வன்முறையைப் படம்பிடித்திருப்பது, இந்து வன்முறையை சில மத வெறியர்களின் செயல் என்று சுருக்காமல் சமூகத்தின் பல மட்டங்களிலும் நிலவும் தேசியவாத-முஸ்லிம் மற்றமையாக்கக் கதையாடல்கள் மற்றும் நிகழ்த்துதல்களின் விளைபொருளாகக் காட்டியிருப்பது போன்றவை எல்லாம் மிக முக்கியமான பங்களிப்புகள். அதற்காகவே நாம் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும்.
மொய்தீன் பாய்: ரஜினியின் இந்து-முஸ்லிம் அரசியல்!
ரஜினி முஸ்லிமாக நடிப்பதைப் பற்றியும், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ‘பாட்ஷா’ என அவர் நடித்ததையும் ஒப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் ரஜினியின் மதச்சார்பற்ற முகத்தைப் பாராட்டியும் பதிவுகளைக் காண முடிந்தது. ரஜினியின் திரைப்படங்கள் உண்மையிலேயே மதச்சார்பற்ற அவரது அரசியலை வெளிப்படுத்துபவை. அதில் மறுப்பதற்கு இல்லை; அவரது ஆன்மிக அரசியலில் இஸ்லாமியர்களுக்கும் இடம் இருப்பதை அவர் எப்போதும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.
ஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்
பத்திரிகையாளராக இருந்து ’குக்கூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநரானவர் ராஜு முருகன். தனது ’ஜோக்கர்’ படத்துக்காக தேசிய விருது வரை பெற்ற அவரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள ’ஜிப்ஸி’ ஒரு...
‘ஆஸாதியும், விடுதலையும் ஒன்றுதானே சார்?’ – ‘அமரன்’, ‘விடுதலை’ ஆகிய திரைப்படங்களை முன்வைத்து… – ர.முகமது இல்யாஸ்.
கடந்த நவம்பர் மாதம் கனடா நாட்டின் க்வெல்ஃப் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் இணைய வழியில் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தமிழ்...
‘பைசன் காளமாடன்’: வன்முறை, இணக்கம், ‘நல்ல தேசியம்’ குறித்த விமர்சனங்கள் – மு. அப்துல்லா
மாரி செல்வராஜ் முதல் படமான ’பரியேறும் பெருமாள்’, மணிரத்னம் தனது சரக்கு மொத்தமும் தீர்ந்து, பல்வேறு நடிகர்களை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்ற மார்க்கெட்டை தொடங்கிய ’செக்க சிவந்த வானம்’ ஆகிய...
‘யார் குற்றவாளி?’ – ‘பாதாள் லோக்’ முன்வைக்கும் பகிரங்கமான கேள்வியும் ரகசியமான பதிலும்!
இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் சமூகங்கள், அதிகார வர்க்கத்தில் under represented ஆக இருப்பதும், இதே சமூகங்கள் இந்திய சிறைச்சாலைகளில் over represented ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல. இந்த உண்மையைக் கதைக்கருவாக்கி, அதன் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’.
மரிச்ஜாப்பி: உண்மையும் வழுவும்! – ஹரிலால் நாத் புத்தகத்தின் மீதான விமர்சனம்! – மு.அப்துல்லா
1
‘மரிச்ஜாப்பி இனப்படுகொலை’ என்பது மேற்கு வங்கத்தை ஆண்ட இடது முன்னணி அரசின் மீதான களங்கமாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த மக்கள் எல்லை...
’ஜன நாயகன்’ Vs சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ – தமிழ்நாட்டின் ‘Barbenheimer’ சூழல்! – ர. முகமது இல்யாஸ்
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ மற்றும் மற்றொரு பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பீ’ ஆகிய இரண்டு...



















