ஷிண்டேவின் கருத்தும் ஊடகங்களின் இந்துத்துவச் சார்பும்

ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறிய ஒரு எச்சரிக்கையை, ஏதோ அப்பழுக்கற்ற புனிதர்களின் மீது சுமத்தப்பட்ட அபாண்டப் பழி என்பதைப் போல இந்த ஊடகங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது ஏற்க இயலாதது.

செய்தி ஊடகம் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறதாம்!

மொத்தத்தில் நம் நாட்டின் காட்சி–செய்தி–பொழுதுபோக்கு ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாக்கப்பட்டு இந்து மத வெறியின் பக்கவாத்தியங்களாகச் செயல்படுபவைதாம். இருப்பினும் பார்ப்பனியத்தின் சென்சார் கண்களில் சிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் ஒன்றிரண்டு கலகக்குரல்களையும் நெரிக்க வேண்டும் என்பதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் விருப்பம். இட்லரின் இந்திய வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்?

ஆனந்த விகடன் எதிர்ப்பின் அரசியல்

ஆனந்த விகடனில் (7-11-12) வந்துள்ள 'நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று… பாலியல் தொழிலாளி' என்கிற கட்டுரைக்கு எதிரான சமூக வலைத்தள நண்பர்களின் பலவீனமான எதிர்ப்பு குறித்து ஒரு மூன்று குறிப்புகள்.

13 நக்சலைட்டுகள் கைது: நடுநிலை தவறும் ஊடகங்கள்

“நக்சலைட் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு” “நக்சலைடுகள் பள்ளிக்கூடத்தில் பயிற்சி” “நகர்ப்புறங்களில் தளம் அமைக்க நக்சலைட்டுகள் திட்டம்” என்றெல்லாம் காவல்துறைச் செய்திகளை அப்படியே வெளியிட்டுள்ளன ஊடகங்கள்.

அமெரிக்காவும் ஒரு திரைப்படமும் முஸ்லிம்களும்

லிபியாவிலிருந்த தங்களின் தூதரகம் தாக்கப்பட்டு, தூதர் உட்பட நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஹிலாரி கிளின்டன், "அய்யோ, இதென்ன? அவர்களின் விடுதலைக்கே நாம்தானே காரணமாக இருந்தோம். பெங்காஸியை அழிவிலிருந்து காப்பாற்றியவர்கள் நாம்தானே. அங்கா இப்படி நடந்துள்ளது?" என அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருங்கே காட்டியதாக ஏதோ ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன். அமெரிக்கர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நம்ப வேண்டியதில்லை என்பதையும், அதிலும் குறிப்பாக பிற நாடுகள் குறித்து சராசரி அமெரிக்கர்கள் அறிந்துள்ளது ரொம்பச் சொற்பம் என்பதையும்  ஓரளவு அறிந்திருந்த போதிலும்...